Posts Tagged ‘சினிமா’

சினிமா சினிமா – தொடர் பதிவு

Posted: ஒக்ரோபர் 17, 2008 by அடலேறு in தொடர் பதிவு
குறிச்சொற்கள்:, ,

என்னை தொடர் பதிவில் மாட்டி விட்ட நண்பர் மோகனுக்கு நன்றிகள்

1.அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
சின்ன வயசா இருக்கப்போ தூர்தர்சன்ல வாரா வாரம் ஞாயிறுக்கிழமை
சாங்காலம் அம்மா கடலை வருதுக்குடுக்க அப்பாவோட easy chair ல
சாஞ்சுட்டே படம் பாத்தது தான் அப்ப ஒரு 7 வயசு இருக்கும் .

ஆ. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
நா, எங்க அண்ணா அப்பறம் சில டவுஸர் பாண்டிகளோட ஒரு தடவ பொள்ளாச்சி
நல்லப்பா தியேட்டர்க்கு ஜுராசிக்பார்க் பாக்க போனது தான் நியாபகம் இருக்கு

இ. என்ன உணர்ந்தீர்கள்?
பயத்தை உணர்தேன்

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சுப்ரமணிய புரம் சுவாதிவோட நடிப்புல(அழகுல!!) வழுக்கி விழுந்த சராசரி தமிழ் பசங்கள்ள நானும் ஒருத்தன் கண்கள் இரண்டால் பாட்டு ஒரு வாரம் டாப் என்னோட லிஸ்ட்ல

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
டெல்லி வந்து ரொம்ப காஞ்சு போய் சுத்துன தமிழ் படமே பாக்க முடியாததால போன வாரம் என் நெலமைய பாத்து நண்பன் ஒருத்தன் குடுத்த “ரன்” படம் தான் கடைசியா அரங்கிலன்றிப் பார்த்தது
( நான் தாண்டா சிவா ,” வீடு பூந்து உன் தங்கச்சிய தூக்கரண்டான்னு” சொன்னப்ப உணர்ச்சி வசத்துல ப்ரண்டோட ஆம்லட்ட தூக்குனதால பிரச்சன ஆனது வேற விஷயம்)

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அன்பே சிவம் படம் பாத்துட்டு கண்ல தண்ணி வராத குறை தான். சுந்தர்.சி படம்ன்னு நம்பவே முடியாது

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
சொல்ற மாதிரி தெரியல

ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
எந்த தொழில்நுட்பமும் இல்லாதப்பவே விட்லச்சாரியார், லட்ட பறக்க வெச்சது மறைய வெச்சது இது தான் இன்னைக்கும் பெருசா தெரியுது.
அப்பறம் நண்பர் மோகன் சொன்னதையும் சேத்திக்கோங்க.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
சின்ன வயசுல இருந்து வாரமலர் துணுக்கு மூட்டை படிக்கறது வழக்கம் .
அப்பறம் +2 படிக்கறப்ப நம்ம ஜோசுவா வாரம் தவறாம வண்ணதிரை வாங்கிட்டு
வந்து லாஸ்ட் பெஞ்ச்ல திருட்டு தனமா படிக்கற சுகமே தனி தான்

7.தமிழ்ச்சினிமா இசை?
நிறைய மாற்றம் தொழில்நுட்ப ரீதியாக. துல்லியமான இசை சப்தங்கள ரஹ்மான் ஹாரிஸ் கிட்ட தாராளமா கேட்கலாம். தமிழ்ச்சினிமா இசை அப்படின்னா இப்படி தான் இருக்குன்னு புரியவெட்ச இளையராஜா மாதிரி நிறைய பேரு தமிழ் ல இருக்கறதால தமிழ்ச்சினிமா இசை தேனிசை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
அது சொன்ன போய்டே இருக்கும் , CAST AWAY ,அப்கோளிப்டோ இதெல்லாம் மறக்க முடியாத காவியங்கள்னே சொல்லலாம்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடி தொடர்பு மறைமுக தொடர்பு சைடுல தொடர்புன்னு எல்லா தொடர்பும் இருக்கு . எங்க அண்ணா V.Z துரை , சுப்பிரமணியம் சிவா அசிச்டண்டா இருந்தார் .

என்ன செய்தீர்கள்?
பாடலுக்கு மொக்க வரிகள் எழுதுன ஆனா அது எங்க அண்ணன கூட திருப்தி பண்ல.அண்ணா இயக்கர படத்துக்கான முதல் கட்ட வேலைகள் நடக்குது. அலப்பறைய போட்டு எப்டியாட்சும் ஒரு வரிய கண்டிப்பா பாட்டுல சேத்தீருவோம்ள

பிடித்ததா?
ரொம்ப

அதை மீண்டும் செய்வீர்களா?
வாய்ப்பு வந்தா பாக்கலாம் .

தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
தெரியலயே ,ஆனா என்னோட மேம்பாட்டுக்கு உதவும்

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ்ல நிறைய நல்ல இயக்குனர்கள் இருக்காங்க. நிறைய பேரு வாய்ப்புக்காக
காத்திட்டு இருக்காங்க. மசாலா படங்கள் வரவு தமிழ் சினிமாவ எவ்வளவு தூரம் கொண்டு செல்லும்ன்னு தெரியல. ஆனா நல்ல படங்களின் வரவ பாக்கறப்ப தமிழ் சினிமாக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் இருக்குனே சொல்லலாம்

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

பொதுவா பத்தா நிலமை படுமோசம், ஆயிரக்கணக்கான பேர் வேலை இழப்பார்கள் ( எங்க அண்ணனும் தான் ) etc ect . தனியா பாத்தா ” ஏமிரா தீசுக்கோரான்னு ” தெலுங்க வச்சு ஒப்பேத்துவேன்,இல்லன்ன ஹாலிவுட் அதுவும் இலைன்னு சொன்னீங்ன்னா எண்ட சீப் மினீஸ்டர் EK நாயனார்ன்னு சொல்லிட்டு கேரளா கரையோரம் ஒதுங்க வேண்டியது தான்

இப்ப சிலரை நான் மாட்டிவிட வேண்டிய நேரம்
நண்பர்அருட்பெருங்கோ
தோழிஉமா
உங்களுக்கொரு சிநேகிதிபிரியா
ஜெனியின் தோழன் கார்க்கி

If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

Advertisements