Posts Tagged ‘பூனை’

இல்லாத மீசை

Posted: திசெம்பர் 19, 2009 by அடலேறு in அடலேறு, கவிதை, தமிழ், புனைவு, Imagination, scribblings
குறிச்சொற்கள்:, ,

குங்குமசிமிழின் அடைபட்டிருந்த

நத்தை ஒன்று வெளியேறி

எனக்கான இடம் கொடு என்கையில்

சம்மதிப்பதாய் பாவனை செய்து

நாட்காட்டி தேதி கிழித்த பின்

சிலந்தி வலையில் மாட்டி விடுவீர்கள்

மீண்டு எழுகையில் நவயுக

பிரிதி எய்து அனைத்தின்

சாராம்சம் நீயென போதை

ஏற்றி பின் வசை பாடி

யாருமற்ற தனிமையின் பின்னிரவில்

தேனீக்கள் கூட்டமாய் கொட்டும்

என பயமுறுத்தி மீண்டும்

சிமிழிக்குள் அடைத்த பின் வீரமாய்

தடவிக்கொள்வீர்கள் இல்லாத மீசையை

Advertisements

my_girl

நீர்

உன்மேல் பட்ட மழைத்துளி பிறவி பயனை பெற்றதாய் அமைதி கொள்ள மிச்ச துளிகள் பெருவெள்ளமென கடல் சேர்கிறது
ஆவியாகி மீண்டும் தன் பிறவிப்பயனுக்காய்

நிலம்

உன்னை சுமப்பதாலே போதை தலைக்கேறி
சுற்றுவதாய் பிதற்றுகிறது பூமி

காற்று

நீ சிரிக்கையில் உள் சென்ற ஆக்சிஜன் தேவதையின்
முச்சுக்காற்று என வெளியேறி கர்வம் கொள்ள அதிலிருந்து
மகரந்த சேர்க்கைக்காக கடன் பெற்று
செல்கின்றனவாம் வண்ணத்துப்பூச்சிகள்

ஆகாயம்

நீ வெளி வராத போது உன்னை விட சிறந்த ஓவியம் வரைய மேகத்தை கூட்டி பிரயத்தனம் பண்ணுகிறது ஆகாயம், கண்டவுடன் இயலாமையால் நாய் குட்டியகவோ பூனை குட்டியகவோ பரிசளித்து போகிறது ஆங்காங்கே வானம் முழுக்க.

நெருப்பு

உனக்கென்ன அமைதியாய் கல்லூரிக்குள் சென்று விடுகிறாய்
உன்னை காணாத கோபத்தில் சுட்டெரிக்கிறது சூரியன் மாலை வரை

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

இந்த கவிதை உயிரோசையில் வெளியாகிய என்னுடைய முதல் படைப்பு உயிரோசையில் வாசிக்க இங்கே செல்லவும்

mykitten

அரிசிக்கடை செட்டியார் வந்துவிட்டு போன மாலை நேரம்

எங்கள் அத்திலிச்சி பூனை பழுப்பு நிறத்தில் ஒன்று, வெளிர் மஞ்சள்

நிறத்தில் இரண்டு , கருப்பு நிறத்தில் ஒன்று என நான்கு குட்டிகள்

ஈன்றது வெளிர் மஞ்சள் குட்டிகளை அப்பா எப்போதும்

செம்பட்டயன் என்றே அழைப்பார்

பூனை ஐந்து குட்டிகள் போட்டது என்றும் ஒன்றை அதுவே தின்று

விட்டதாகவும் அண்ணன் சொன்னான். கோட்டாம்பட்டியில் குடி

இருக்கும் போது அம்மா சமைத்த நண்டு தொண்டையில் சிக்கி ஒரு

பூனை குட்டி இறந்து போனதாக அப்பா எப்போதும் அம்மாவை

திட்டுவார்.

அம்மா அமைதியே உருவானவள் அப்படியெல்லாம்

செய்யமாட்டாள் என்பது என் திண்ணம் .

அடுத்த நாள் லட்டு வாங்கி திரும்புகையில் இறந்த பூனைக்கு

படையல் இட்டு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற என்னிடம்,

அதற்கான தொகையாய் என் பங்கு லட்டையும்

பெற்றுக்கொண்டான் அண்ணன்.

பின்பு வந்த பிறந்தநாள் கொண்டாத்தில் மறந்தே போனோம்

செம்பட்டயன் இறுதிசடங்கை ,யாருக்கும் நினைவிருக்காது

அது இறந்தது ஆகஸ்ட் 11 , அன்று நல்ல மழை

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!