Posts Tagged ‘movie review’

Yona

கலைஞனுக்குள் கலை எப்போதுமே உயிர்ப்புடன் தான் இருக்கும், அது அவனை புற உலகிலிருந்து விலக்கி ஒரு கற்பனை உலகில் சஞ்சரிக்க‌ வைக்கிறது. அதனால் தான் தனக்குள்ளேயே பேசிக்கொண்டும், திரும்ப திரும்ப அந்த கலையின் வடிவத்தை திருத்திக் கொண்டும் சதா அந்த கலையுடன் தினசரியை கழிக்கிறான். கலையின் வடிவம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், கவிதையாகவோ, எழுத்தாகவோ , காட்சி ஊடகமாகவோ , ரசித்து செய்யும் ஒரு பணியாகவோ கூட இருக்கலாம் ஆனால் அதை அவனோ/அவளோ விரும்பி தன்னுடைய‌ தினசரிக்குள் அனுமதிக்கும் போது அது அவர்களை கொந்தளிக்க வைக்கிறது, அலைக்கழிக்கிறது. எதோ ஒரு தருணத்தில் அது கலைஞனையும் மீறி வெளிப்படும் போது அதை வெகுஜன மொழியில் காட்சிப்படுத்துகிறான். இப்படி அலைகழிப்புகளுடன் வாழ்ந்து , மகத்தான இஸ்ரேலிய கவிதைகளை கொடுத்த பெண் கவிதாயினி யோனா வாலட்ச்சின் வாழ்கையை மையப்படுத்திய படம் தான் யோனா.

1960களில் இஸ்ரேல் பதிப்பக துறையின் குறுக்கு வெட்டு தோற்றத்தை இந்த படத்தில் காணலாம். யோனா எப்போதும் கவிதைகளை பற்றி சிந்தித்துக்கொண்டும் , அதை பற்றியே பேசிக்கொண்டுருக்கும் ஒரு பாத்திரம் . ஆரம்பத்தில் இவளின் கவிதைகம் நிராகரிக்கபடுகிறது. திரும்ப திரும்ப முட்டி மோதியும் பலனில்லை. எதேச்சையாக தேனீர் விடுதியில் ஒரு பதிப்பக துறை சார்ந்த நபரை சந்தித்து அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறாள்.அவளின் முதல் கவிதை பிரசூரமாகிறது. காலையில் அந்த பிரசூரமான செய்திதாளுடன் படுக்கையில் இருந்து எழுவாள், சந்தோஷம் பிடிபடாது, வெறும் உள்ளாடையுடன் படுக்கையில் இருந்து வெளியே ஓடி வந்து அம்மவை கட்டிக்கொள்வாள், பிரசூரமான செய்தியை சொல்ல வந்த‌ ஆண் நண்பர்கள் அவளுடைய அறையில் இருந்து வெளியே வருவதை பார்த்த அம்மா அவளின் உடையை சரிசெய்யும் காட்சி வசீகரமானது, வெற்றி ஒருபோதும் சூழ்நிலைகளை பார்த்து கொண்டாடபடுவதில்லை. யோனாவின் வாழ்க்கையில் காமமும், காதலும், கவிதையும் பிரிக்கமுடியாதது.

அவமதிப்புகள், இழப்புகள், தீராத கவிதை என அனைத்தும் சேர்ந்து யோனாவை மனநல மருத்துவமனையில் சேர்க்கும். மீண்டு வந்து , திரும்ப ஒரு உக்கிரமான காதலையும் கொண்டாடுவார், அதிலிருந்து யோனாவே வெளியேறி மன பிறழ்வு காரணமாக மருந்துவமனையில் அனுமதிக்கப்படுவார். அவர் திரும்ப திரும்ப டாக்டரிடம் ஒரே கோரிக்கையை தான் வைத்துக்கொண்டிருப்பார், மன வியாதிக்காக தரப்படும் மருந்துகளை நிறுத்த வேண்டும். அவைகள் தான் மனதை கவிதைகளை நோக்கி குவிக்க முடியாமல் செய்கிறது , தன்னால் கவிதை எழுத முடியாததற்கு காரணம் மனநல மாத்திரைகளே என வாதாடுவார். உறவுகளை சீட்டுக்கட்டுகளை போல மிக எளிமையாக உதறி தள்ளிவிட்டு வந்த யோனா, கவிதைகள் தன்னை விட்டு விலகிபோவதை காணமுடியாமல் முதன் முறை உடைந்து அழுவாள். இந்த காட்சி தான் படத்தின் உட்சம் என்பது என்னலவிளான பார்வை.

அதன் பிறகு தன்னை கண்டுகொள்வார், கவிதைகளை தடுத்தது மருந்துகளல்ல. எப்போது கவிதைகள் பதிபிக்கப்படும், பிரபலமாகலாம் என்ற நினைப்பு தான் தன்னை கவிதையில் இருந்து தூர கொண்டுவந்ததை உணர்ந்து எதை பற்றியும் சிந்திக்காமல் தேர்ந்த கவிதைகளை எழுத தொடங்குவார். நீ எங்கே உறங்குகிறாய், என்ன சாப்பிடுகிறாய் , என்ன உடுத்தியிருக்கிறாய் என்பது முக்கியமல்ல. உன் துறையில் என்ன சாதனை செய்தாய் ? அதுவே பேசப்படும், அதுவே உனக்கானது.  1985 ல் மார்பக‌ புற்று நோய்க்கு பிடிவாதமாக மருத்துவம் செய்து கொள்ளாமல் இறந்து போனானர்., ஆனால் இன்றளவும் இஸ்ரேல் அதன் நினைவுகளின் வைத்து கொண்டாடும் சென்ற நூற்றாண்டின் மகத்தான‌ கவிதாயினி யோனா வாலட்ச்.

பின் சேர்க்கை:-
யோனாவின் ஒரு கவிதை ஹீப்ரு மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது.

Tefillin

Come to me
Let me do nothing
You do it for me
Do everything for me
Everything I start to do
You do instead
I will lay tefillin I’ll pray
You lay the tefillin for me
Bind them on my arms
Play with them inside me
Pass them delicately over my body
Rub them against me
Arouse me everywhere
Make me faint with sensations
Run them across my clitoris
Tie up my hips with them
So I can come quickly
Play with them inside me
Tie up my hands and legs
Do things to me
Against my will
Turn me over on my stomach
Put the tefillin in my mouth a bridle bit
Ride me I am a mare
Pull my head back
Until I shriek with pain
And you are pleasured
Later I will pass them over your body
With unconcealed intention
Oh, how cruel my face will be
I will pass them slowly over your body
Slowly slowly slowly
Around your throat I’ll pass them
I will wind one end a few times around your throat
And tie the other to something stable
Something very heavy perhaps rotating
I’ll pull and I’ll pull
Until your last breath escapes
Until I strangle you

Advertisements

152340

இது மெக்ஸிகோ திரைப்படம் . கதை மிக எளிமையானது, சிகிச்சை மறுக்கப்படும் க‌ணவனுக்காக போராடும் மனைவி. உலக திரைப்ப‌ப்படங்களே மெதுவான காட்சி அமைப்புகளை கொண்டது என்ற வாதத்தை நிறைய பேரிடம் கேட்டிருக்கிறேன், அதற்கு நேரெதிர் படம் இது. நேர்த்தியான திரைக்கதை மற்றும் சலிக்காத பார்வை கோணங்கள் ஒவ்வொரு காட்சியையும் அழகாக்குகிறது.

இன்சூரன்ஸ் நிறுவனம் தன்னுடைய கணவனுக்கு தர வேண்டிய சிகிட்சை உதவிகளை தர மறுக்கிறது. கணவர் மிக அவரசரமான மருத்துவ தேவையில் இருக்கிறார். நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டால் ., இரண்டை அழுத்துவும், எட்டை அழுத்தவும் என கடுப்படிக்கிறார்கள். டாக்டரை பிடிக்கமுடியவில்லை. ஒரு வழியாக அவரை பிடிக்க அலுவலகத்திற்கே வந்தால் அவர் வார விடுமுறையை கழிக்க‌ எஸ்கேப்பகிறார். இறுதியாக அவர் வீட்டை கண்டுபிடித்து துப்பாக்கி முனையில் மடக்கும் போது , டாக்டரின் மனைவி மருத்துவ உதவி கிடைக்காமல் போவ‌தற்கு இவரை போன்ற டாக்டர்களே காரணம் எனவும், இதை சரிசெய்ய இவருடைய மேனேஜரால் முடியும் எனவும் அவர் தற்போது இருக்கும் கிளப்பையும் இடம் காட்டுகிறாள். அங்கே போனால் அந்த‌ அதிகாரி ஏற்கனவே வாரவிடுமுறை கொண்டாட தொடங்கிவிட்டார்., சாவகாசமாக திங்கள்கிழமைக்கு மேல் வரசொல்கிறார். அங்கேயும் தன்னுடைய கணவரின் அவசரத்தை சொல்லியும் வேலைக்காகாமல் துப்பாக்கியை நீட்ட, அவர் அவருக்கு மேலுல்ல அதிகாரிகை கைகட்டுகிறார்., அங்கே போனால் அவர் அதற்கு மேலுல்ல அதிகாரி என குரங்கு வாலை பிடித்த கதையாகிறது. கடைசியாக அனைவரையும் சமாளித்து தன்னுடைய கணவனுக்கு மருத்துவம் பார்த்தாளா இல்லையா என்பதை திரையில் பாருங்கள்.

சுவாரசியங்கள் சில‌, மேனஜரை பார்க்கும் போது எதேச்சையாக துப்பாக்கியால் சுட்டு விடுவது, தன்னுடைய மகனுடனான சிறு சண்டை, துப்பாக்கி களேபரங்கள் அனைத்தும் முடிந்ததும் “அடுத்து நாம் பேங்கை கொள்ளையடிக்கலாம்” போன்ற வசனங்களை சொல்லலாம்.

மிக முக்கியமாக இடத்தை இந்த படம் பிடிப்பதற்கு காரணம் சமூகத்தில் புரையோடிப்போன ஊழலை ஒரு பெண்ணின் வலியுனூடாக காட்சிபடுத்தியிருக்கிறது. அவசர தேவையில் இருக்கும் போது கூட அதிகார வர்கத்தின் கதவுகள் ஒரு போதும் சாமானியனுக்காய் திறக்காது என்பதை இந்த படம் பேசுகிறது. மனிதன் தன்னை காத்துக்கொள்ள தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களை நோக்கி கையை நீட்டுகிறான். அந்த நிறுவனத்தின் முதலாளியயே பிடித்தும் கூட தான் இந்த நிறுவனத்தின் செயல் அதிகாரி தான், முதளீட்டார்கள் தான் முடிவெடுக்க முடியும் என அடுத்தவரை நோக்கி கையை நீட்டுவார். இப்படி மனிதர்களின் அலட்சியத்தையும், தனிமனித திமிரையும், உழலையும் ஒரு சேர காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் பலம்.

காட்சிகளின் நேர்த்தி ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. கிளப் பார்க்கிங்கிலிருந்து காரில் வெளியேரும் காட்சியை சொல்லலாம், வாகனத்திற்கு ஒரு அடி வெளியே தள்ளி கேமராவை வைத்திருப்பர் இயக்குனர் வாகனத்தின் ஒரு முனையில் இருந்து காட்சிபடுத்தப்பட்டிருக்கும் அந்த நகர்வு. காரின் உள்ளே ஒரு பாதியையும், வெளியே ஒரு பாதியும், பின் பிரேமில் சுழலும் தளம் என நேர்த்தியான காட்சி. இருளை மிகச்சிறப்பாக ஒளிப்பதிவாளர் கையாண்டிருக்கிறார். கட்சிதமான திரையம்சம், உறுத்தாத நிர்வாண காட்சிகள், இசை, ஒளிப்பதிவு என அதற்கான தரத்தை தக்கவைத்து கொள்கிறது மாண்ஸ்டர் வித் தொசண்ட் ஹெட்ஸ்.

சாமான்யன் எப்போதும் சாதாரணமானவன் தான். அவனால் அரசுக்கு எதிராக துரும்பையும் அசைக்க முடியாது. நிற்கதியற்று , வெறுப்பும், கழிவிரக்கமும் கொண்டவனாக தன்னையே அவன் கீழ்மை படுத்துக்கொள்வான் தான். ஆனால் அவனிடம் ஒரு துப்பாக்கி கிடைத்தால், அதிகாரதிற்கு எதிராக அந்த தோட்டாக்களை பயன்படுத்த தயங்கமாட்டான் என்பதை இந்த படம் நமக்கு சொல்கிறது.