மரப்பாச்சி பொம்மை- ஒரு கரு நான்கு கதைகள்!

முன்கதைச்சுருக்கம்: அழகான மாலையொன்றில் கடற்கரையில் நண்பர்கள் நால்வர்(நிலாரசிகன்,அடலேறு,ஜனா,அதிபிராதபன்) சந்தித்தோம். அப்போது ஜனா ஒரு சிறுகதைக்கான மிகச்சிறந்த கருவை எடுத்துரைத்தார். அம்மா அப்பா குழந்தை மற்றும் ஓர் இராணுவ வீரன் - இவர்கள்தான் கதையில் நடமாடும் பாத்திரங்கள். நாங்கள் நால்வரும் ஒரே கதையை வெவ்வேறு கோணத்தில் எழுதி இருக்கிறோம். குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக நிலாரசிகனும், அம்மாவின் பார்வையாக அதிபிரதாபனும்,அப்பாவின் பார்வையாக அடலேறுவும்,இராணுவ வீரனின் பார்வையாக ஜனாவும் எழுதி இருக்கிறோம். நான்கு கதைகளும் ஒரே நேரத்தில் வலையேற்றம் செய்யப்படுகின்றன.... Continue Reading →

எதிர் கூர்தலறம்

. சட்டென திறக்கும் போது சிதறி ஓடும் பல்லியாய் கலைந்து போனது நினைவுகள் 'புள்ளைக்கு பசி எதாவது குடுங்க' என அவள் யாசிக்கும் போது. பூசாரி நீர் தெளிக்கையில் அனிச்சையாய் தலை சிலுப்பிக்கொள்ளும் கோவில் ஆடாய் சட்டை பைக்குள் முகம் புதைக்கும் விரல்கள் "சில்லறைக்கென" . கிடைக்காத நாணயத்தின் தோல்வி மறைக்க ஐந்து ரூபாயோ , பத்து ரூபாயோ எப்போதாவது கொடுத்துப்போவேன் நானும் சில நேரங்களில் பயணம் முடித்த ரயில் பெட்டியும் நீண்ட கூர்தலறதுக்கு பின் பெருந்தொகை... Continue Reading →

கடைசி பக்க கிறுக்கல்கள்-3

இந்த கவிதை உயிரோசையில் வெளியாகிய என்னுடைய முதல் படைப்பு உயிரோசையில் வாசிக்க இங்கே செல்லவும் அரிசிக்கடை செட்டியார் வந்துவிட்டு போன மாலை நேரம் எங்கள் அத்திலிச்சி பூனை பழுப்பு நிறத்தில் ஒன்று, வெளிர் மஞ்சள் நிறத்தில் இரண்டு , கருப்பு நிறத்தில் ஒன்று என நான்கு குட்டிகள் ஈன்றது வெளிர் மஞ்சள் குட்டிகளை அப்பா எப்போதும் செம்பட்டயன் என்றே அழைப்பார் பூனை ஐந்து குட்டிகள் போட்டது என்றும் ஒன்றை அதுவே தின்று விட்டதாகவும் அண்ணன் சொன்னான். கோட்டாம்பட்டியில்... Continue Reading →

அன்புள்ள அப்பாவிற்கு

அன்புள்ள அப்பாவிற்கு, உங்கள் அன்பு மகன் எழுதும் கடிதம். அப்பா சிறு வயதில் நான் உங்களுடன் கழித்த  தருணங்கள் இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளன.தினமும் அதிகாலையில்  சைக்கிளின்  முன் bar  என்னை உட்கார வைத்து வாய்க்காலுக்கு  என்னை கூட்டி சென்றதை மறக்க முடியுமா ??அப்போதெல்லாம் எனக்கு பச்சை தண்ணீரில் குளிக்க பிடிக்காது ஆனால் நீங்கள் லாவகமாக அடிக்கும் நீச்சலில் மதி மயங்கி நானும் அந்த பச்சை தண்ணீரில்  நீச்சல் கற்றுக்கொள்ள அடம் பிடித்தது  நியாபகம் இருக்கிறதா? ... Continue Reading →

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑