கொஞ்சம் காதலித்து பார்

தனி மனிதன்

முதல் நாள் கல்லூரியில் அவளின் திமிரான அழகை கண்டு பிரமித்தது உண்டா? அவளிடம் பேச வேண்டும் என்றே வார கணக்காய் கடிகார நிமிடங்களை எண்ணியது உண்டா ? அவளே முதல் முறை பேசிய போது தூங்காமல் அந்த தருணத்தை நாட் குறிப்பில் பதிவு செய்தது உண்டா ? அவளிடம் நட்பாகி போனபின்பு நண்பர்களின் பொறாமை சந்தித்தது உண்டா ? ”இன்னைக்கு நீ போட்டிருக்க சட்டை நல்லா இருக்கு” என்றதும் அந்த சட்டயை துவைக்காமல் வாரம் முழுக்க போட்டதுண்டா ? இரவு முழுக்க உனக்காக “அசைன்மென்ட்” எழுதி தர அவள் எழுத்து அழகுக்காகவே அதை தராமல் வகுப்பில் திட்டு வாங்கியது உண்டா ?  ”இன்னைக்கு நான் தான் செஞ்ச” என்றதும் யாருக்கும் தராமல் அவளின் டிபன் பாக்ஸ் முழுக்க சாப்பிட்டு ஏப்பம் விட்டதுண்டா? காதலை மானசீகமாய் நட்பாக்க முயன்றதுண்டா? நட்பான காதலை மறைக்க முயன்று அவளிடம் கையும் களவுமாக சிக்கியது உண்டா ?

ஒரு மாதம் கழித்து ” நானும் உன்ன லவ் பண்றனு நினைக்கற ” என அவள் சொல்ல ஜனரஞ்சகமாக வெட்கம் பழகியதுண்டா? கல்லுரியின் இறுதி நாளில் தோள் சாய்த்து அவள் அழுதது உண்டா? கல்லூரி முடித்து இருவரும் வேறு வேறு திசையில் பயணித்தது உண்டா?
சொந்த ஊரில் வேலை செய்யும் சௌரியங்களை விட்டு விட்டு உனக்காக மாற்றலாகி வந்ததுண்டா ?

இரவு முழுதும் அவள் கை பிடித்து கடற்கரையில் நடை பழகியது உண்டா ? உன் பிறந்த நாளுக்காக அநாதை குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து அந்த புகை படத்தை உன்னிடம் காட்டி உன்னிடம் முத்த பரிசு பெற்றதுண்டா ? “உனக்கு என்ன அவ்ளோ புடிக்குமாடா ?” என திரும்ப திரும்ப கேட்டு சந்தோஷத்தில் அவள் குழந்தையாய் மாறி போவதை பார்த்ததுண்டா . திடிரென உனக்கு வெளியூர் மாற்றலாக., அழுது வீங்கிய கண்களோடு ரயில் பெட்டி மறையும் வரை கையசைத்தபடியே உன்னை வழியனுப்பியதுண்டா ? பயணம் முடியும் முன்பாக 164 முறை அழைப்பு விடுத்தது காதலால் உன்னை திணறிபோக செய்ததுண்டா?திடிரென அவளை பெண் பார்க்க வந்ததும், அதற்கு பின் நடந்தவைகளை அவள் விவரிக்க மூர்ச்சையடைந்து போனதுண்டா?

பெற்றோர் சம்மதிக்காத நிலையில் கூட வீட்டைவிட்டு ஓடிவந்தாலும் இப்பொழுதிருப்பதைக் காட்டிலும் என்னை சந்தோசமா வெட்சுப்பனு நம்பிக்கை எனக்கு இருக்கு டா என்று உஙகளிடம் உளறியதுண்டா? அப்படி சொன்னபோதும் கூட அவளை வீட்டைவிட்டு ஓடிவர சொல்லிவிட மாட்டீர்கள் எனும் அவள் நம்பிக்கையை காப்பாற்றியதுண்டா ? காதல் விவகாரம் அவள் வீட்டில் தெரிந்து அவளை அடித்து துன்புறுதுகையில் அலைபேசியில் சப்தம் கேட்டு துடி துடித்ததுண்டா?
”இனி மேல் அவள மறந்தர சொன்னா” என்று அவள் அறை தோழி சொல்ல சொல்ல உலகமே இருண்டு போனதுண்டா ?

நாளை அவளுக்கு திருமணம் என்ற நிலையில் அந்த நாளே நினைவில்லாமல் போகும் அளவு குடித்து குடித்து தனிமை வெரித்ததுண்டா ? போதையில் கூட அவளுக்கு பிடித்த நாய் குட்டி அவள் கணவன் வீட்டில் வளர்க்க உரிமை உண்டா என்று பிதற்றியபடி மயக்கமடைந்தது உண்டா ?பல முறை கேட்டு விட்ட நண்பர்களுக்காக அவளை மறந்து விட்டதாக பொய் சொல்லி ஒரு மணி நேரத்தில் ஒரு முறையாவது அவள் நினைவுகளை கடந்து வருவதுண்டா ?

இல்லை என்றால் கொஞ்சம் காதலித்து பார்.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

47 thoughts on “கொஞ்சம் காதலித்து பார்

Add yours

  1. வணக்கம்.
    இன்று உங்கள் நட்பு கிடைத்தமை மிக்க மகிழ்ச்சி இனி வரும் நாட்களில் உங்களோடு உங்கள் எழுத்துக்களுடன் சேர்ந்து பயணிப்பேன்.
    தோழமையுடன்
    உங்கள் நண்பன் ஜெனா

    Like

    1. நன்றி ஜனா, கண்டிப்பா நானும் உங்கள் எழுத்துக்களுடனும் உங்களுடனும் சேர்ந்து பயணிக்க ஆசை படுகிறேன். எழுத்துக்களில் சந்திப்போம். முதல் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றிகள்

      Like

  2. இதுல பாதி உண்டு மாப்பி,

    புனைவுலயே கலக்குற! அனுபவித்துப் பார், அதிலுள்ள சுகமும் வலியும் தெரியும்.

    சீக்கிரம் இந்த பாக்கியம் கிடைக்கப் பெறுக.

    Like

  3. நட்பு அட்டகாசம்..

    //காதல் விவகாரம் அவள் வீட்டில் தெரிந்து அவளை அடித்து துன்புறுதுகையில் அலைபேசியில் சப்தம் கேட்டு துடி துடித்ததுண்டா?
    ”இனி மேல் அவள மறந்தர சொன்னா” என்று அவள் அறை தோழி சொல்ல சொல்ல உலகமே இருண்டு போனதுண்டா ?

    நாளை அவளுக்கு திருமணம் என்ற நிலையில் அந்த நாளே நினைவில்லாமல் போகும் அளவு குடித்து குடித்து தனிமை வெரித்ததுண்டா ?
    போதையில் கூட அவளுக்கு பிடித்த நாய் குட்டி அவள் கணவன் வீட்டில் வளர்க்க உரிமை உண்டா என்று பிதற்றியபடி மயக்கமடைந்தது உண்டா ?பல முறை கேட்டு விட்ட நண்பர்களுக்காக அவளை மறந்து விட்டதாக பொய் சொல்லி ஒரு மணி நேரத்தில் ஒரு முறையாவது அவள் நினைவுகளை கடந்து வருவதுண்டா ?

    இல்லை என்றால் கொஞ்சம் காதலித்து பார்.//

    டேய் இத எல்லாம் காதலிக்காத னு சொல்லறதுக்கு யூஸ் பண்ணறது.. இத எல்லாம் சொல்லி காதலிச்சு பார்னு சொன்னா யாரு மாப்பி காதலிப்பாங்க ??

    Like

  4. //ஓஓஓஒ, காதலில் இத்தனை ‘உண்டா’ க்கள் இருக்கா?

    நல்ல அனுபவம்தான் போல இருக்கு.//

    இத மட்டும் இல்ல இப்ப இருக்கற காதல்ல இன்னும் சில “உண்டா” க்கள் இருக்கு ஜி.. நான் சொல்ல வந்ததோட “கரு” புருஞ்சுதா?? 🙂

    Like

  5. அடலேறு,
    நன்றாக இருந்தது.ரொம்பவே ஆராய்ச்சி செய்த மாதிரி இருந்தது.அனுபவம் இல்லேனு சொல்றத நம்புவதற்க்கு சிரமமாகத்தான் இருக்கு.

    Like

  6. காதல் பற்றிய கவிதை அருமை. தொடற்றும் உங்கள் பயணம்.

    என்றும் தமிழ் வாழும் காதலும் கவிதையும் உள்ளவரை

    தோற்று போவேன் என்று தெரிந்த பின்னரும் உன்னை காதலித்து தோற்று போனதில்

    எனக்கு இன்னனும் மகிழ்ச்சிதான் இல்லாவிடில் வெறும் வெள்ளை காகிதமல்லவா போயிருக்கும்
    என் வாழ்க்கை

    என் சிறிய முயற்சி

    Like

    1. நன்றிங்க சிவக்குமார் பழனிசாமி தங்களின் பின்னுட்டதிர்க்கு. கவிதை வரிகள் அழகு. தாங்கள் வலைபக்கம் வைத்துள்ளீர்களா ஆம் எனில் வலைபக்க முகவரியை தெரிவிக்கவும். பழனி சாமி எனக்கு மிக பிடித்த பெயர்.

      Like

    1. நன்றி நண்பா, கண்டிப்பா படிங்க. முதல் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றிகள்.
      உங்கள் வலை பூ முகவரியை சரியாக உள்ளிடவும் கேட்பானில். இது என்னை போன்றோர்கள்
      தங்கள் வலை பூ வருவதற்கு இலகுவாக இருக்கும்

      Like

  7. அழகியலில் ஆரம்பித்து துன்பியலில் முடிகிறது…. நல்லாயிருக்கு அடலேறு!!!

    காதலே அழகான விஷயம்…காதலைப் பற்றிய நினைவுகள் சொல்லவும் வேண்டுமா??? சில விஷயங்கள் நடக்கும் போதை விட, நடந்து முடிந்த உடன் நினைவுகளாய் மாறியபின்பு நெஞ்சில் சுவை(மை)யாய், பசுமையாய் நிற்குதுல்ல???

    Like

  8. //அப்படி சொன்னபோதும் கூட அவளை வீட்டைவிட்டு ஓடிவர சொல்லிவிட மாட்டீர்கள் எனும் அவள் நம்பிக்கையை காப்பாற்றியதுண்டா ?//
    கலக்கிட்டீங்க அடலேறு! வாழ்த்துக்கள்.ஆமா, காதல் கவிதைல கூட நீங்க சிங்கம்தான் போல?!
    ஏங்க சுமார் ஒரு டசன் அனுபவமாவது இருக்கும் போல்…காதல்ல தாங்க!
    ஏதோ ஒரு காதல் குறும்படம் பார்த்த உணர்வு வருதுங்க!தொடரட்டும் உங்கள் பயணம்!

    Like

    1. சிங்கம்லாம் ஒன்னும் இல்லைங்க ஹரி.
      //ஏங்க சுமார் ஒரு டசன் அனுபவமாவது இருக்கும் போல்//
      ஒரு டசனா :-0 இங்க ஒண்ணுக்குகே வழி இல்லங்க ஹரி காசா , பணமா எல்லாம் புனைவு தான அடிச்சு ஓட்ட வேண்டியதுதான்.
      //ஏதோ ஒரு காதல் குறும்படம் பார்த்த உணர்வு வருதுங்க//
      அடுத்து குறும்படம் எடுத்தற வேண்டியது தான் ஆனா பாக்கறதுக்கு நீங்க தான் ஆள் புடிக்கணும் 🙂

      Like

  9. //அப்படி சொன்னபோதும் கூட அவளை வீட்டைவிட்டு ஓடிவர சொல்லிவிட மாட்டீர்கள் எனும் அவள் நம்பிக்கையை காப்பாற்றியதுண்டா ?

    இதெல்லாம் ரெம்ப ஓவருங்க. கேட்க ஆளில்லைன்னு நினைச்சிட்டீங்களா?

    //இத மட்டும் இல்ல இப்ப இருக்கற காதல்ல இன்னும் சில ‘உண்டா’ க்கள் இருக்கு ஜி.. நான் சொல்ல வந்ததோட ‘கரு’ புருஞ்சுதா??

    எங்களுக்கும் புரியுது தம்பி. பழம் பிஞ்சிலே பழுத்தா நல்லாயிருக்காது

    Like

    1. வாங்க அக்கா, எப்படி இருக்கீங்க. ரொம்ப நாளா கடை பக்கமே காணமே???

      //இதெல்லாம் ரெம்ப ஓவருங்க. கேட்க ஆளில்லைன்னு நினைச்சிட்டீங்களா?//
      நீங்க இருக்கப்ப அப்படியெல்லாம் நினைக்க முடியுமா?

      //எங்களுக்கும் புரியுது தம்பி. பழம் பிஞ்சிலே பழுத்தா நல்லாயிருக்காது//
      சுட்டபழம் அக்கா சொன்னதை கேட்டீங்களா? இந்த அக்காகளே இப்படிதான்.ம்ம்ம்

      Like

  10. //சுட்டபழம் அக்கா சொன்னதை கேட்டீங்களா? இந்த அக்காகளே இப்படிதான்.ம்ம்ம்//

    யோவ்.. அக்காவோடது மாட்டும் இல்ல.. உனக்கு இந்த தம்பியோட அட்வைஸ் கூட அதே தான்!! பிஞ்சுல பழுத்தறாத !!

    Like

    1. நாங்க தான் தெளிவின் தலைவனா இது வரைக்கும் இருக்கம்ல. யாருமே நம்ப மாட்டங்கறாங்க உண்மையான காதல் அனுபவம் இல்லனு சொன்னா. என்ன பண்ணட்டும்? ஆனால் ஒன்னு சொல்லுவ பழுத்து விட்ட(காதலில்) மாப்ள சுட்டபழத்துக்கு வாழ்த்துக்கள்.
      ( மாட்டினயா !!! ? )

      Like

    1. ஆமாம் உமா, அது மட்டும் இல்லாமல் பூக்களின் மெளங்களில் உறங்கும் நிசப்ததை ரசிக்க கற்றுக்கொடுத்ததுண்டா வையும் சேர்க்க வேண்டும் . காரணம் இல்லாமல் முதல் முறையாக பூவையும், கல்லையும், கனவுகளையும் ரசிக்க கற்றுக்கொடுப்பவள் அவளை தவிர யாராக இருக்க முடியும்?
      ரசனை பிரதிபலிப்பு உமா.

      Like

    1. ஓ, அப்படியா, கடித கால காதலை பார்க்க முடியாமல் போனது ஒரு பெரிய வருத்தம் தான் கருணா.

      //இதில் எனக்கு நிறைய உண்டு// அப்படியா… சரி சரி…

      //இன்னக்கி தூங்கின மாதிரித்தன்// இந்த பதிவு எழுதின அன்னைக்கு நானும் தூங்கல, நிறைய காதல் தோல்வி நண்பர்களிடம் நீண்ட நாள் கழித்து தொடர்பு கொண்டு அவங்க காதல் அனுபவம் கேட்டு அவங்களையும் தூங்க விடல.

      Like

பின்னூட்டமொன்றை இடுக

Create a free website or blog at WordPress.com.

Up ↑