எதிர் கூர்தலறம்

அப்பாவின் விரல்.

சட்டென திறக்கும் போது
சிதறி ஓடும் பல்லியாய்
கலைந்து போனது நினைவுகள்
‘புள்ளைக்கு பசி எதாவது குடுங்க’
என அவள் யாசிக்கும் போது.

பூசாரி நீர் தெளிக்கையில் அனிச்சையாய்
தலை சிலுப்பிக்கொள்ளும்
கோவில் ஆடாய் சட்டை பைக்குள்
முகம் புதைக்கும் விரல்கள் “சில்லறைக்கென” .

கிடைக்காத நாணயத்தின் தோல்வி மறைக்க
ஐந்து ரூபாயோ , பத்து ரூபாயோ
எப்போதாவது கொடுத்துப்போவேன் நானும்
சில நேரங்களில் பயணம் முடித்த ரயில் பெட்டியும்

நீண்ட கூர்தலறதுக்கு பின் பெருந்தொகை பெற்றவளாய்
“உங்க புள்ளைக நல்லா இருக்கணும்”என வாழ்த்திப்போனாள் இல்லாத கடவுளுக்கு படையலாய்

மண முடித்து எட்டு வருடம் தேதி கிழிக்கப்பட்ட காலண்டரில்
அப்பாவாகாத எனக்காக ” ஓ வென பெருங்குரலெடுத்து”
கிளம்பியது மலை ரயில்.

பின் சேர்ப்பு : ’கூர்தலறம்’ என்பது செயல் அல்லது இயக்கதிற்கு ஏற்ற எதிர்வினை
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

18 thoughts on “எதிர் கூர்தலறம்

Add yours

  1. நல்லாயிருகு மச்சி…
    மன்னிக்கனும், ஆனா தலைப்புதான் புரியல.
    (தமிழ்ல எழுதிருப்பாய்ங்க போலருக்கு, நம்ம நெலம இப்படி ஆகிருச்சே மச்சி)

    Like

  2. அட்டகாசம்…

    தலைப்பு, கவிதை இரண்டுமே…

    ஒவ்வொன்றிர்க்கும் கொடுத்திருக்கும் உவமையும் சரி, கடைசியில் ’ஓ’ வென கிளம்பிய ரயில் என்றதும் மிக அருமை…

    சின்ன ஆலோசனை: கவிதை முடிவில், கூர்தலறத்தின் தெளிவான பொருளைச் சேர்க்கலாமே?

    Like

  3. மாப்ள உனக்கு மெயில் பண்ணுனே பார்த்தியா ?அப்போ இருந்த
    பீல் ல கமெண்ட் போட்ருந்தா இன்னம் நல்லா இருந்துருக்கும்
    இப்பவும் ஒன்னும் குறைஞ்சு போயடுல
    நீ கலக்கு மாப்பி
    இதேபோல வித்யாசமான் உணர்வுகளோட உன் சந்திப்பை எதிர் பார்கிறேன்
    வாழ்த்துக்கள்

    Like

    1. இல்ல நண்பா,
      /இதேபோல வித்யாசமான் உணர்வுகளோட உன் சந்திப்பை எதிர் பார்கிறேன்//
      கண்டிப்பா எதிர்பாக்கலாம் நண்பா
      பின்னுட்டத்திற்கு நன்றிகள்

      Like

  4. கவிதை அருமை நண்பரே..எனக்கு இந்த கவிதையினை படிக்கும்போது மகேந்திராவின் கமராவின் ஊடே தெரியும் காட்சி அமைப்பும் லொக்கேசனும் தெரிந்தன. கவிதை ஒரு உணர்வாகவே இருந்தது..

    Like

    1. நன்றிங்க JP நீண்ட நாட்களாக தங்கள் பின்னூட்டத்திர்க்கு பதிலலிக்கவில்லை என்று இன்று தான் கண்டுபிடித்தேன் நண்பா.
      வருத்தம் தெரிவிக்கிறேன். பின்னூட்டத்திற்க்கு நன்றிங்க JP

      Like

அடலேறு -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Create a free website or blog at WordPress.com.

Up ↑