சொந்த அனுபவமும் நொந்த அனுபவமும்

vex_boy_final

வாழ்க்கைல எவ்வளவோ நொந்த அனுபவம் இருந்தாலும் என்னோட பேரே எனக்கு நொந்த அனுபவமா ஆனது தான் கொடுமை வெச்சாலும் வெச்ச பேரு ”அடலேறு”னு நம்ம மக்களோட அழிச்சாட்டியம் தாங்க முடியல..

தொலைபேசி உரையாடல் -1

நான்:ஹலோ கேஸ் ஏஜன்சியா?

எதிர்முனை:ஆமாங்க, நீங்க யார் பேசறீங்க?

நான்:அடலேறு பேசறங்க…

எதிர்முனை: என்ன அடையாறுல இருந்து பேசறீங்களா?

நான்: இல்லங்க என் பேரு அடலேறு..

எதிர்முனை:என்ன அடலொரு ஆ..
(டென்சஹனாகி என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் இருக்க)

அலோவ் அடலொரு சொல்லுங்க , எந்த ஏரியா நீங்க?

நான்:நான் கோடம்பாக்கம் ..,வீட்ல கேஸ் தீந்துருச்சு அதான்           போன் பன்ன

எதிர்முனை:முன்னாடி அடையாறுனு சொன்னீங்க..

நான்:இல்லங்க அது எம் பேரு..

எதிர்முனை:அடையாறுனு பேரா ?

நான்:இல்லங்க அடலேறு தான் என் பேரு.

எதிர்முனை:சரி அடலொரு வீட்டு அட்ரெஸ் சொல்லுஙக…

என் பெயரை தப்பாக சொன்னால் கூட பரவாயில்லை அவர் ஒரு பெயர் படுகொலையை அரங்கேற்றி கொண்டிருந்தார்.

இதுக்கு மேல என் பெயரை ஒருவர் கொலை செய்வது பொருக்க முடியாமல் ஏதும் சொல்லாமலேயே ரிசீவரை வைத்து விட்டேன்.

எதிர்முனை:அலோவ் அலோவ் அலோவ்வ்வ்வ்வ்

தொலைபேசி உரையாடல்-2
நான்: வணக்கம் , புத்தககடையா?

எதிர்முனை:ஆமா சொல்லுங்க சார்,

நான்:(குறிப்பிட்ட புத்தகதின் பெயரை சொல்லி ) வந்துருச்சுங்களா?

எ.மு: இல்ல சார் இன்னும் வர்ல ,வந்தா கூப்பிட்டு சொல்லறோம் , உஙக பேரு, செல் போன் நம்பர் சொல்லுங்க..
(இந்த முறையும் எதாவது ஏழரை நடக்கும் என எண்ணியவாறே)

என் பெயர் அடலேறு, அலைபேசி எண் வந்து..

என்ன சொன்னீங்க அடலாறா? இல்லங்க அடலேறு .. ஓ அடவாரா சரி செல் போன் நம்பர் சொல்லுங்க..
இல்ல சார் என் பேரு அடலேறு..

அது தான் அடவாரு செல் போன் நம்பர் சொல்லுங்க..

வழக்கம் போல பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பாதலால் போல இந்த முறையும் போன் துண்டிப்பு.

எதிர் முனை: ஹலோ அடவாறு ,அடவாறு லைன்ல இருக்கீங்களா?

தொலைபேசி உரையாடல்-3

நான்: ஹலோ, டிராவல்ஸ் ஆபீஸா?

எ.மு: ஆமா சார் சொல்லுங்க..

நான்:சார் வெள்ளிக்கிழமை பொள்ளாச்சிக்கு ஒரு டிக்கெட் வேணும்

எ.மு:இருங்க பாத்து சொல்ற… ஒரே சீட் தா இருக்கு சார்

நான்:நானும் ஒருத்தன் தான் சார் இருக்க

எ.மு:சரி சார் , உங்க பேரு , போன் நம்பர் சொல்லுங்க.

நான்:(சனி இன்னைக்கு பொட்டு வெச்சு , பூவும் வெச்சு விளையாடாம போகாதே என நினைத்தவாரே)

பேரு அடலேறு, அலைபேசி எண்.^&*^(*&^*(

எ.மு:சரி சார் ,  புக் பண்ணிட்ட 7 மணிக்குள்ள வநது டிக்கெட் வாங்கிகோங்க..
(ஆச்சர்யம் கொண்டவனாய் முதல் முறையே நம்ம பெயர சரியா எழுதீட்டாரே ! இவன் ஒரு மிக பெரிய அறிவாளி என எண்ணியபடியே)

சார் பேர சரியா எழுத்தீட்டீங்களா?

சரியா எழுதீட்ட சார், தினமும் எவ்வளோ பேரு போன் பண்றாங்க, அதெல்லாம் கரெக்டா  எழுதீட்ட ”கடலாறு தான சொன்னீங்க”னு

சொன்னானே பாக்கனும்…, இடியே என் தலை மீது விழுந்தது

தொலைபேசி உரையாடல்-4

பெண்: நான் விமலா பேசர , அரவிந்த் தான பேசறது

நான் : இல்லங்க ராங் கால்.

பெண்:இல்ல அரவிந்த் இந்த நம்பர் தான் குடுத்தாரு

நான் :அப்படினா அரவிந்த்கிட்டயே கேளுங்க
பெண்: யூ ஆர் ச்சீட்டிங் ஐ நோ யூ ஆர் அரவிந்த்.

நான் :செத்துப்போன பாட்டி மேல சத்தியமா நான் அரவிந்த் இல்ல நான் அடலேறு.

பெண்:என்ன அடில ஆறா.. வாட் யூ மீன் ?

நான் : இந்த முறை சிக்க கூடாதுனு நினைத்தவாரே பொறுமையாக அது இல்லங்க விமலா “ என் பேர் அட’லேறு என அழுத்தமாக சொன்னேன்.

பெண்: என்னங்க வெரும் ”லேரு”னு ஒரு பேரா, ஆமா ஏன் எப்பவும் அட அட னு சொல்றீங்க,

நான் : இல்லங்க அட அட னு சொல்லுல, அது தான் என் பேரு..

பெண்: என்னங்க ’அட’ னு ஒரு பேரா முன்னாடி ’லேறு’ னு தான சொன்னீங்க..

நான் : இல்லங்க ’அட’ வும் ’லேறு’ ம் சேர்த்தி சொல்லுங்க அது தான் என் பேரு

பெண்:ஓ அடலாறா சரிசரி ..

இவளை திருத்த முடியாது என முடிவு செய்து .. விமலா ஆள விடுங்க என் பேரு எனக்கே தெரியாது போன வைங்க என சொல்லி இனைப்பை துண்டித்தேன் .

வீனா போனவள பெத்து விமலானு பேரு வெச்சாங்களானு கேட்க தோன்றியது வேற .

44 thoughts on “சொந்த அனுபவமும் நொந்த அனுபவமும்

Add yours

  1. மிகவும் அருமை அடலேறு!!!

    உங்களுக்கு கவிதை வரும் தெரியும் ஆன நல்ல நகைச்சுவை உணர்வோடு எழுத தெரியும் என்று தெரியாது.. ரொம்ப நல்ல இருக்கு தம்பு…

    Like

  2. அஹா…பேரைச்சொல்லவா அது ஞாயமாகுமா??? அது சரி, கடைசிவரை அந்த அடலேறு என்றால் என்ன என்பதை மட்டும் பயபுள்ள சொல்லவே இல்லையே!! அடலேறு என்றால் ஆண்சிங்கம் என்றொரு கருத்து இருப்பதை “எவனோ ஒருவன்” சொன்னதையும், போரிலே மறவனாக போரிட்டு நெஞ்சிலே காயமடைந்த மறவனையும் அடலேறு என்று சொல்வதாக “நிலாரசிகன்” சொன்னதையும், இங்கு நான் சொல்லவா??????

    Like

    1. சொல்லவானே எல்லாத்தையும் சொல்லீட்டீங்களே நண்பரே, அடலேறு பற்றி பக்கத்துல அடலேறுக்கான அர்த்தத்தையும் பின் சேர்ப்பு செய்துருக்க. பாருங்க.

      Like

  3. ஹி ஹி ஹி…
    கொஞ்சம் கஷ்டம்தான்… இதே மாதிரி என் நிலைமையை யோசித்துப்பார் மாப்பி..

    ஹலோ, எவனோ ஒருவன் பேசுறேன்….

    அப்றம்,
    உங்க வீட்டுல நடந்துதே…. ’ஒவ்வொருத்தனுக்கும் பேரப் பாருடா…’ அந்த மேட்டரையும் பதிவாகப் போடலாமே.

    Like

    1. ஹ ஹா,

      குடிகார நண்பனிடம்,,,

      ஹலோ, எவனோ ஒருவன் பேசுறேன்..
      எவனா இருந்தா எனக்கென்ன? உன் பேர சொல்டா..
      பேரு தாங்க ”எவனோ ஒருவன்”.

      இப்படி ஒரு மிக பெரிய பதிவே போடலாம் நண்பா,

      ஓ ! அண்ணா சொன்னதா” ஒவ்வொருத்தனுக்கும் பேரப் பாருடா” கண்டிப்பா போடனும் ஒரு பதிவா.

      பின்னுட்டத்திர்க்கு நன்றிகள் நண்பா.

      Like

  4. அடலேறு

    வலைபதிவுக்காக புனைபெயர் வைத்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.இயற்பெயரே அடலேறுதானா?

    உங்கள் பெற்றோர்களுக்கு நல்ல ரசனை.

    சில வருடங்களுக்கு முன் என்னுடன் பணிபுரிந்த ஸ்நேகதியின் பெயர் முத்தாரம்.நான் பலமுறை திரும்ப திரும்ப கேட்டு உறுதி செய்த பிறகுதான் பெயர் புரிந்தது.

    வித்யாசமாக பெயரை வைத்துக் கொண்டு இந்த அனுபவம் கூட இல்லையென்றால் எப்படி அடலேறு ?

    பதிவு நன்றாக இருந்தது நண்பா

    Like

    1. பெயர பற்றி உங்களுக்கு தனியா சொல்ற கார்த்தி.
      பின்னூட்டத்திர்க்கு நன்றிங்க நண்பா.
      முடிந்தால் ஜீ-டாக் மின் அரட்டைக்கு வரவும்
      என் முகவரி: infosat06@gmail.com

      Like

  5. மிகவும் அருமையான நகைச்சுவை. வாழ்த்துகள்.

    (முதலில் சொல்ல விருப்பமில்லை என்று தான் வைத்திருந்தேன்.
    ஆனால், சொல்ல விருப்பமில்லை said…….. என்று பின்னூட்டம் வரும்போது முரண் தென்பட்டதால் பெயர் சொல்ல விருப்பமில்லை என்று மாற்றி விட்டேன்.)

    Like

    1. ஹா ஹா பின்னூட்டத்திலயும் நகைச்சுவை பன்றீங்க.
      பெயர் சொல்ல விருப்பமில்லை பார்த்ததும் உன்மையாகவே உங்களுக்கு
      ”பெயர் சொல்ல விருப்பமில்லை” என்று தான் நினைத்தேன்.
      ரசனை

      Like

  6. While reading this, i remember a joke i read in Reader’s Digest some years back:

    There were three people named somebody, nobody and mad one.

    One day, there was a problem between the first two and in the end somebody killed nobody.

    Now, Mad one takes up the phone and call the Police.

    “Hello, is it Police Station? Somebody has killed nobody. Please hurry up.”

    ” What???? Are you mad one?”

    “Yes, Sir, but how do you know my name?”

    Like

  7. நண்பர் அடலேறு அவர்களுக்கு,

    படிப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், இதிலிருக்கும் சிரமம் புரிகிறது. கிட்டத்தட்ட நானும் இதை இங்கு (லாஸ் ஏஞ்செலெஸ்-ல்) அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.

    வாழ்த்துகளுடன்,
    பிரபு பழனிசாமி.

    Like

    1. நன்றி திருவேங்கட பிரபு, தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திர்க்கும்.
      இந்த வகை சிரமங்களும் கொஞ்சம் இனிமையாக தான் இருக்கிறது.
      பழனிசாமி எனக்கு மிக பிடித்த பெயர்

      Like

  8. அட, அடலேறுதான் உங்க சொந்த பேரா! ஆச்சர்யமாத்தான் இருக்கு. உங்க பெற்றோர்கள் இப்படி ஒரு பேர் வெச்சது பாராட்டவேண்டிய விசயம்தான். சந்தோசமா சுவீட் எடுங்க, கொண்டாடுங்க.. அடலாறு, இல்ல அடலோறு, ம்ம்.. அடவேறு, வந்து அடசேறு, சே.. அடலேறு.. அப்பாடி!

    Like

    1. //அடலாறு, இல்ல அடலோறு, ம்ம்.. அடவேறு, வந்து அடசேறு, சே.. அடலேறு.. அப்பாடி//
      ஹா ஹா ஹாஆஆஅ..

      சொந்த பேர் கதைய இன்னொரு தடவ சொல்றங்க கபில்லகவா இல்ல கபில்லவவா ம்ம்… கபில்லமவா வந்து கபில்லகுவா
      சே.. கபில்லசிவா அப்பாடி! // இது சும்மா உல்லாகாட்டிக்கு//

      வருகைக்கும் பின்னூட்டத்திர்க்கும் நன்றிங்க கபில்லசிவா

      Like

  9. ஓ.. உங்கள் இயற்பெயர் அடலேறு தானா ? நான் அது உங்கள் புனைப்பெயர் என்று நினைத்திருந்தேன். நல்ல தமிழ்ப் பெயரை யார்தான் இப்போது சரியாக உச்சரிக்கிறார்கள்?
    உங்கள் அனுபவம் மிக்க நகைச்சுவையாக இருந்தது. 🙂

    Like

  10. அடலேறு!
    கடலாறு!
    (மார்க பந்து மொத சந்து… கவித மேரி இல்லே!)

    காமேடியிலேயும் பூந்து வெளாடுறீங்க போங்க….But உங்க பேர்(நேர்மை) ரொம்ப பிடிச்சிருக்குங்க..

    Like

  11. உண்மையிலேயே பாவம் நீங்க. என்னவிட அதிகமா அனுபவிச்சிருக்கீங்க போல!! :‍).. நல்ல நகைச்சுவையா எழுதியிருக்கீங்க..

    அடலேறுதான் உங்க உண்மையான பேரா? நான் ஏதொ புனைப்பெயருன்னு நினைச்சேன். ஆமா இதுக்கு என்னங்க அர்த்தம்?

    Like

வால்பையன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Create a free website or blog at WordPress.com.

Up ↑