அபரஞ்சிதா

தை சொல்லியாகிய நான் சத்யா மென்பொருள் வல்லுனன் , நாகலாந்தில் உள்ள சடாச்சாராவில்  இந்திய ராணுவதிற்கான மென்பொருள் வடிவமைப்புக்காக சிறப்பு அழைப்பின் பேரில் வந்து விட்டு திரும்பிக்கொண்டிருக்கிறேன். ரயில் பயணம் கூட புத்தக வாசிப்பு பிடித்தமான ஒன்று என்பதால் எப்போதும் என் பைகளை ஏதேனும் ஒரு எழுத்தாளர் நிரப்ப தவறுவதில்லை , இந்த முறை சென்னையில் இருந்து வரும் போது நேரம் இல்லாத காரணத்தால் ராஜேஷின் அறையின் இருந்து எடுத்து வந்த  புத்தகம் இருந்தது.ரயில் கிளம்பிய சிறிது நேரத்திற்குள்ளாகவே புத்தகத்தில் மூழ்கிப்போனேன், மலை பாதையாதலால் மெல்லென புறப்பட்ட ரயில் அதே வேகத்தில் தான் சென்று கொண்டிருந்தது, மிக அரியவகை மரங்களாலும்,அழகிய மலைகளாலும் சூழப்பட்டதால் இந்த ரயில் பயணம் ஒரு ரம்மியமான உணர்வை ஏற்படுத்தி கொடுத்ததை ரசித்தபடியே ஜன்னல் பக்கம் திரும்பி லயித்து கொண்டிருந்தேன்,சட்டென என் கண்களை ஊடுருவி யாரோ என்னை பார்ப்பது போல் இருக்க எதிர்வரிசையை நோக்கினேன் .கால் மேல் காலிட்ட ஒருத்தி ”நாகாலாந் போஸ்ட்” எனும் நாகாலாந்தின் பிரபல பத்திரிக்கையை வைத்து தன் முகம் தெரியாதவாறு படித்துக்கொண்டிருந்தாள் அவள் என்னை பார்க்கவில்லை என ஊர்ஜிதம் ஆனது, அவளுக்கு நேர் மேல் இருக்கையில் சற்று பருத்த உடல் கொண்ட பெண்மணி என்னையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார்.அந்த அம்மாவிற்கு 40க்கும் குறையாமல் வயது இருக்கும்,இவ்வளவு கனத்த உடம்பு கொண்ட பெண்மணி எப்படி அங்கு ஏறி படுத்தாள் என்பதை பார்க்கமுடியவில்லையே என்ற வியப்பு தொற்றிக்கொண்டதை விரட்ட முடியவில்லை.அந்த பேப்பர் பெண்மணி மெதுவாக பேப்பர் மடித்து விட்டு கைபையில் இருந்து”குட்சா கவுந்” எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்தாள்,[குட்சா கவுந் நாகாலாந்தின் மெது ரொட்டி ].அப்போது தான் பார்த்தேன் பேப்பர் படித்துக்கொண்டிருந்த அந்த பெண்ணை,என்ன ஒரு பேரழகு, என்ன ஒரு தேஜஸ் அவளை விட்டு என் கண்களை பிரிப்பதற்கு வெகு நேரம் எடுத்துக்கொண்டது மூளை.

ன்னையே பார்த்து கொண்டிருந்தவள் நான் அவளை பார்ப்பது தெரிந்ததும் தலையை சன்னல் பக்கமாக திருப்பிக்கொண்டாள். அவள் அந்த பக்கம் திரும்பினது கூட எனக்கு வசதியாய் போனது அவள் அழகை கண் கொண்டு ரசிக்கலாமே,நல்ல திக்கான மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தாள், இருக்கமாக இருந்திருக்கும் போல அடிக்கடி சரி செய்து கொண்டிருந்தாள்.பொசு பொசுவென கழுத்துக்கு சற்றே கீழே தள்ளி கோர்வையாய் வெட்டப்பட்ட தலைமுடி அனைத்தையும் இழுத்து ஒரே hair band ல் அடக்கியிருந்தாள், அவள் அழகு மாதிரியே திமிறிக்கொண்டிருந்தது hair bandல் அடைபட்ட தலைமுடிகளும்.

வளுடைய மேல் சட்டை இடுப்புக்கு சற்று கீழிறங்கி முடிந்துபோன இடத்தில் ஆரம்பித்த கால் பேண்டு தொள தொள வென தொடங்கி  இருக்கமாக முடிந்த இடத்தில் அழகான காலணி அணிந்திருந்தாள்.நடுநடுவே வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு ஆங்கிலம், ஹிந்தி,தெலுங்கு என கலந்துகட்டி பேசிக்கொண்டிருந்தாள், இதில் எனக்கு புரியாத இரு மொழிகளும் அடக்கம், பேச்சின் நடுவே அவளின் போதை தரக்கூடிய கண்கள் என்னை ஆராயமலில்லை, அவளின் ஒவ்வொரு பார்வையும் என் ஒவ்வொரு வயதாய் தின்று கொண்டிருந்தது,இன்னும் ஒரு முறை பார்த்தால் கூட முழுதுமாய் உடைந்து போய்விடுவேன் என்று ரத்தம் முழுக்க ஹார்மோன் திரவத்தை பீய்ச்சி அடித்தது.அடுத்த முறை அவள் பார்க்கும் போது கண்டிப்பாக பேசி விட வேண்டும் என ஆண்மைக்கான கூறுகளை தேடிக்கொண்டிருந்தது மனம், அவள் மதிக்கும் பெண்மையில் தான் ஒளிந்து கொண்டுள்ளது நான் மதிக்கும் ஆண்மை என நான் புரியும் கணத்தில் ஒரு பார்வை பாத்தபடியே கேட்டாள்” நீங்க தான சத்யா”? தூக்கிவாறி போட்டது எனக்கு, நான் தழுதழுத்த குரலில் ஆமா!! உங்களுக்கு எப்படி தெரியும் என்றேன்,தெரியும் அவ்ளோ தான் !! என்றவளை சும்மா விட முடியுமா?திரும்ப திரும்ப கேட்டதில் மேஜர் சார் என்னை வழியனுப்ப வருகையில் ”ஆல் தி பெஸ்ட் சத்யா” என கூறியதை நினைவுகூர்ந்தாள்.

ங்க பேர்? என கேட்டு முடிக்கும் முன்பாக “அபரஞ்சிதா” என முடித்தாள். உண்மையாவே நல்ல பேருங்க என்று சொல்லி முடிக்கையில் ஒரு பார்வை பாத்தாளே பாக்கனும்,என் கண்னை பார்த்து உன்னால் பொய் பேச வேறு முடியுமா என்பது போல் இருந்தது.

” அது எப்படி முதல் முறை

பார்க்கும் போதே ஆண்மையின் கூறுகள்

அழகு முன்பாக படு தோல்வி

அடைய முடியும் என்கறீர்களா?

இல்லை என்று வாதாடினால்,

நீங்கள் இது வரை அபரஞ்சிதா

போன்ற தேவதைகளின் தேவதையை

பாத்ததில்லை என்று அர்த்தம்”

கொல்கத்தா ரயில் நிலையத்தில் இறங்கி வெகு நேரம் பேசிகொண்டிருக்கும் போது தெரியவந்தது அவளின் இலக்கியம் மீதான ஆர்வம்.அசோகமித்திரன்,கோணங்கி என தொடங்கிய பேச்சு நீண்ட நேரத்திற்கு பிறகு நிர்வாண எழுத்தாளனில் வந்து முடிந்தது.வண்ண நிலவனின்” கடல் புரத்தில்” பற்றி ஒரு விவாதமே நடத்தி முடிக்கும் நேரத்தில், டைரியில் சிலவற்றை எழுதிக்கொண்டு அவளுக்கு தூக்கம் வந்ததாய் சொல்லி தூங்கி போனாள்.அவளின் ஒவ்வொரு பேச்சும் , தெளிவான சிந்தனையும் என்னை விட எனக்குள் இருந்த ரசனைகாரனுக்கு நிச்சயம் ஒரு கிறக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என அறுதியிட்டு கூற முடியும், அவன் இன்று இரவுமுழுதும் உறங்கானிலை கொள்வான் என்பதும் திண்ணம். என்னுடைய டயரி குறிப்பில் தே.பா.நா என எழுதி விட்டு அவள் தூங்கி வெகுநேரம் அவளையே பாத்துக்கொண்டிருந்தவன் எப்போது உறங்கினேன் என தெரியவில்லை.

காலையில் எனக்கு முன்பாகவே எழுந்துவிட்டாள் போல நான் விழிக்கும் போது யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள்.ரயில் மெர்கம் பூர் நிலையம் தாண்டி ஆந்திராவை கடந்து கொண்டிருந்தது,நான் பல் தேய்த்துவிட்டு வந்ததும் எனக்கான காலை உணவை வாங்கி வைத்ததாய் கைகாட்டினாள், ஆனாலும் தொடர்ந்து அலைபேசியில் பேசியபடியே இருந்தாள்,அதில் இனி சடாச்சாரா வர முடியாது எனவும்,அங்கும் தனக்கு சென்னையில் கிடைக்க கூடிய அளவு தான் சம்பளம் தரப்படுவதாகவும் பேசிக்கொண்டு இருக்கையிலேயே அந்த இணைப்பை துண்டித்துவிட்டு அவள் அம்மாவிடம் இனி சடாச்சரா  ஒருக்காலும் வர மாட்டேன் எனவும் மாமாவை இது விஷயமாக என்னை தொல்லைபடுத்த வேண்டாம் எனவும் கூறினாள்,பேசி முடித்ததும் அவளிடம் கேட்டேன் அவளின் வேலை பற்றியும் சடாச்சாரா வருகை பற்றியும்,பேச்சின் தொடக்கமாக தன் தலைமுடியை வாரி சுருட்டி  குடுமி இட்டாள், குடுமியில் இருந்து பிரிந்துவந்த முடிகள் நான் இன்னும் கொஞ்ச நேரம் உன் முகத்தோடு உறவாடி கொண்டிருக்கிறேன் என்றவாக முகத்தின் மேல் படர்ந்து விரிந்திருந்தது.அடிக்கடி அந்த முடிகளை தன் விரல்களால் இழுத்துச்சென்று தன் காது இடுக்கில் விட்டுக்கொண்டிருந்தாள்.காது இடுக்கில் வழிந்த முடி காது மடல் வழியே கீழிறங்கி என்னை பார்த்துக்கொண்டிருந்தது.

காலை உணவை சாப்பிட்டு முடிக்கையில் மணி 11யை நெருங்கி கொண்டிருந்தது. அவளின் அழகுக்கு முன் மீண்டும் மீண்டும் படுதோல்வியை சந்தித்துக்கொண்டிருந்த என் சுயகட்டுபாடு ஒரு நேரத்தில் அவளின் சொல்லொண்ணா அழகில் மயங்கி விட்டதாக புலம்ப ஆரம்பித்த கணத்தில் அவள் முன் என் இருப்பை நான் இன்னும் நீட்டிக்கும் போது சுயகட்டுப்பாடே இருக்காது என்பதால் அங்கிருந்து வந்து ரயில் கதவு பக்கதில் நின்று கொண்டேன்.அங்கு வந்த TTR மாலை 6 மணிக்கு முன்பாக சென்னை சேர்ந்துவிடும் என ஆருடம் கூறினார்.ஒவ்வொரு நிமிடமும் அவள் என்னை முழுதாக உள்வாங்கிக்கொண்டிருந்தாள். அவளின் உள்வாங்கல் முற்றுப்பெறுவதற்கு முன்பாக அவளின்  28 மணி நேர அழகு என்னை பெரிதும் இம்சித்துவிட்டதாக  சொல்லிவிடுவதென முடிவு செய்த வண்ணம் இருக்கையில் வந்து அமர்ந்தேன்.என்னை எதிர்பாத்தவளாய் எங்க போயிருந்தீங்க? என்றாள்…

முதல் முறையாக சொன்னேன் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று ,சிறிதே வெட்க்கபட்டவளாய் உயர் தர ஆங்கிலத்தில் இரண்டு நிமிடம் பேசியிருப்பாள் அந்த உரையின் சாராம்சம் ஒரு குட்டி ஜென் கதையும், எனக்கான நன்றியும்.மாலை வரை என்னை பற்றி பல கேள்விகள் கேட்டு பத்திரப்படுத்திக்கொண்டாள்.மணி நான்கு நெருங்கும் போது ரயிலில் நிறைய தமிழ் வாசம் அடித்தது. இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு என்றேன், அப்பொது அவள் முகம் சற்று வாடியிருப்பதை  பார்க்க முடிந்தது. இத்துனை நேரமும் எதிர் முனையிலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அவள் என் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.சிறிது நேரம் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவள், அவளுக்கு என்ன தோனியதோ முகம் கழுவிவிட்டு வந்தாள்,இப்போது இன்னும் அழகாய் இருந்தது எந்த விதமான செயற்கை தனமும் கலக்காத அந்த முகம். பொட்டுவைக்காம உங்க முகம் ரொம்ப அழகா இருக்குனு நான் சொன்னதுக்காக எடுத்த பொட்டைக்கூட வைக்காமல் மீண்டும் எதிரில் உட்கார்ந்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்,நானும் அபரஞ்சிதா  மட்டுமே உணரக்கூடிய பூக்களில் இருக்கும் நிசப்தம் அங்கு நிறைவேறிக்கொண்டிருந்தது.இன்றைய டைரியில் இதை குறிக்க வேண்டும் என்று நான் நினைக்கும் போது அவள் ஏதோ குறித்துக்கொண்டிருந்தாள் அவளுடைய டைரியில்.

து வரை இல்லாத ஏதோ ஒரு ஈர்ப்பு எங்கள் இருவரையும் விளிம்பு நிலைக்கு தள்ளிக்கொண்டிருந்தது அதை உணர முடிந்ததே தவிர வார்த்தைக்குள் அடைக்க முடியவில்லை,”உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் என்றாள்” மதியத்திற்க்கு பிறகு அவள் என்னிடம் பேசிய முதல் வார்த்தை அது தான்,சொல்லுங்க அபரஞ்சிதா என்றேன், குட்சா கவுந் எடுத்த அதே கைபைக்குள் விட்டு அவளுடைய டைரியை எடுத்து என்னிடம் நீட்டினாள், அதன் அட்டை அவள் குடித்து வைத்த டீ டம்ளரின் நிறத்தில் இருந்தது ,நான் எதுக்கு என கேள்வி கேட்கும் முன்பாக இதுல என்னோட மொபைல் நம்பர் இருக்கு இந்த டயரிய முழுசா படிச்சு பாத்துட்டு எனக்கு கால் பண்ணுங்க, கால் பண்ண தோணலனா என்னோட முகவரி இருக்கு அதுக்கு டைரிய கொரியர் பண்ணுங்க சரியா என்று கேட்டாள், எனக்கு என்னவோ போல ஆகிவிட்டிருந்தது, மீண்டும் ஒரு முறை கேட்டேன் அபரஞ்சிதா, உங்களுக்கு என்ன முன்னாடியே தெரியுமா என்ற கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்து சன்னல் பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டாள்,என்னை அவளுக்கு முன்னமே தெரிந்திருக்கும் என்பது போலத்தான் இருந்தது அவளின் இந்த கடைசி நிமிட செய்கைகள், இது வரை இயல்பாக இருந்தவள் என்ன ஆனது, ஏன் அவளுடைய டைரியை என்னை படிக்க சொல்கிறாள், அவளின் மெளனத்திற்கு காரணம் என்ன, என்னை முன்னமே தெரிந்திருந்தால்,எப்படி? ஏன்? விடை தெரியாத இத்தனை கேள்விகள் என் மனதில் இருக்கும் போதே அடுத்த 5 நிமிடத்தில் நான் இறங்க வேண்டிய ஆவடி வருவதாக காவலர் வந்து சொல்லி சென்றார். அவளுடைய டைரியை என் மடிக்கணிணி பையில் வைத்துக்கொண்டு இறங்குவதற்கு தயாராய் என் மற்ற உடைமைகளை எடுக்க தொடங்கிய போதும் அவளிடம் எந்த சலனமும் இல்லாமல் சன்னல் பார்த்து கொண்டிருந்தாள்.அவளுடைய டைரியில் கடைசி 2 நாட்களாக என்னை பற்றி என்ன எழுதியிருப்பாள் என்பதிலேயே என் கவனம் முழுதும் இருந்தது, அறைக்கு சென்றால் கார்த்தி படிக்கவிடமட்டான் என நன்றாக தெரியும்,அதனால் கடைசி இரண்டு பக்கங்களையாவது ரயில் கிளம்பி சென்றதும் ரயில் நிலையத்தில் உட்கார்ந்து படித்துவிட வேண்டும் என்ற ஆசையில் முண்டியடித்து கதவு பக்கம் நின்று கொண்டிருந்தேன். ஆவடியில் ரயில் 2 நிமிடம் மட்டுமே நிற்கும் என்பதால் அனைவரும் என்னுடைய கதியிலேயே நின்று கொண்டிருந்தார்கள்.

மீண்டும் ஒரு முறை அவளை பார்க்க வேண்டும் என தோன்றியது அவசரமாக உள்ளே சென்று அவளை பாத்தால் சில நிமிடத்துக்கு முன்பு பார்த்த அதே நிலையில் இருந்தாள், அவளிடம் எதும் சொல்ல தோணாமல் மெளனமாய் திரும்பி பார்க்கையில் ரயில் நின்று ஒவ்வொருத்தராய் இறங்க ஆரம்பித்திருந்தார்கள். வண்டி கிளம்புவதற்கு முன் அவளை கீழே இறங்கி சன்னல் வழியாக பார்த்துவிடலாம் என எண்ணி கீழே அவசரமாக இறங்கி பார்க்கையில் அது 2 வகுப்பு குளிர்சாதனப் பெட்டியாதலால் எதுமே தெரியவில்லை நல்ல வேளை எனக்காக கதவருகே வந்து நின்று கொண்டிருந்தாள்,ஒரு புன்னகை பூத்து மடிக்கணிணியுடன் கூடிய அவள் டயரியை உயர்த்திக்காட்டினேன், ஒரு வசீகரிக்கும் புன்னகை ஒன்றை வீசின பிறகு ரயில் அவளை உள்ளிழுத்துக்கொண்டது.முன்பு தோன்றின எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என ஆர்வம் கொப்பளிக்க அருகில் இருந்த நடை மேடை இருக்கையில் அமர்ந்து மடிக்கணிணி பையில் இருந்த அவள் டைரியை எடுத்து முதல் பக்கம் புரட்டினேன், அதில் சிவப்பு கலர் மை பேனாவில் அழகான கையெழுத்தோடு எழுதப்பட்டிருந்தது “இது ஒரு விபச்சாரியின் டயரி குறிப்புகள்” என்று. டப் என தொண்டை குழியை ஏதோ அடைத்துக்கொண்டது ,நிமிர்ந்து பார்க்கையில் தொலை தூரத்தில் புள்ளியென மறையத்தொடங்கி இருந்தது அவளை உள்ளிழுத்துச்சென்ற ரயில் .

(இது சர்வேசன்500 – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக)

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

82 thoughts on “அபரஞ்சிதா

Add yours

    1. கதை எழுதி முடித்ததும் அதன் ஏதாவது ஒரு வரியாகட்டும் சேர்பதற்கோ மாற்றி அமைப்பதற்கோ மிகுந்த பிரயத்தனம் எடுக்க வேண்டுயுள்ளது. அது தான் அப்படியே விட்டு விட்டேன். முதல் கதை தானே இன்னும் தெரிய வேண்டியது நிரம்ப உள்ளது நண்பரே. நன்றிங்க முகிலன். முகிலன் அழகான தமிழ் பெயர்.

      Like

  1. அலைபேசி என்னைக் கொடுத்து பேச விருப்பமில்லை என்றால் டைரியை கொரியர் பண்ணை விடுங்கள் என்ற பொழுது, நான் யூகித்து விட்டேன் என்றாலும்,

    கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் கதையை எடுத்து சென்ற விதம் மிக மிக அருமை.

    வாழ்த்துகள் அடலேறு!

    Like

  2. நன்றாய் எழுதியிருக்கிறீர்கள்.. ஒரே குறையென்றால் அது நீளம் தான்.. ரயில் பயணத்தின் நீளத்துக்கு ஏற்ப எழுத வேண்டும் என்று அவசியமில்லை அடலேறு.. ஆனாலும் அருமையான நடை..

    Like

    1. தெரியும் ஜி, ஆனா பாருங்க ஒரு வருத்தமான விசயம் என்னால இந்த முறை கலந்துக்க முடியுமானு தெரியல, போனவாரம் பதிவர் சந்திப்பு என ஊருக்கு போவதை இந்த வாரம் தள்ளி போட்டேன் (மழையும் தள்ளி போட்டது) ஆதனால இந்த வாரம் சிக்கிக்கொண்டேன். வருத்தம் தான் 😦

      Like

  3. பரவால்லையே…..! அடலேறு பக்கத்துல கவித மட்டும்தான்னு நெனச்சேன், கதையெல்லாம் கூட பூந்து வெளையாடுது. நல்ல கதை அடலேறு. வாழ்த்துக்கள்!

    Like

  4. நல்லதோர் காதல் கதை. சற்று சின்னதாய் எழுதி இருக்கலாம். முடிவில் வேறு ‘நச்’ சேர்த்திருக்கலாம். நடை நன்றாக உள்ளது.

    இந்த எளியவனும் கதை போட்டியில் கலந்துள்ளேன். “அடுத்த வீட்டு பெண்” கதை படிக்க எனது blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/

    Like

  5. அபரஞ்சிதா…ஒருவன் மனதுக்கள் அகப்பட்டுவிடுவதன்முன்னேயே பலர் பிடித்துவிளையாடிய பட்டம்பூச்சி என்பது மனதில் குத்துகின்றது. கதை ஓட்டம் நன்றாக உள்ளது நண்பா. வாழ்த்துக்கள்.

    Like

  6. நல்ல எழுத்து நடை , சுவரஸ்யமான கதை ..

    //அவள் அம்மாவிடம் இனி சடாச்சரா ஒருக்காலும் வர மாட்டேன் எனவும் மாமாவை இது விஷயமாக என்னை தொல்லைபடுத்த வேண்டாம் எனவும் கூறினாள்//

    இந்த இடத்தில் ஊகிக்க முடிகிறது நண்பரே !

    அபரஞ்சிதா – கழனியூரனின் “வாய்மொழியில் உலவும் வரலாறுகள் ” புத்தகத்தில் இந்த கதை தலைப்பு தான் முதல் கதையின் பெயரென்று நினைக்கிறேன் , நல்ல பெயர் .

    வாழ்த்துக்கள் !

    Like

    1. ஆமாம் நண்பரே அந்த இடத்தில் ஊகிக்க வேண்டும் என்றுதான் அந்த வரிகளை சேர்த்தினேன்.
      நன்றிங்க ஜினோவா தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

      ஓ வாய்மொழியில் உலவும் வரலாறுகள் கதை படிக்கவேண்டும் போல் உள்ளது.

      Like

  7. அபரஞ்சிதாவை ரொம்ப அழகா வர்ணிச்சிருக்கீங்க திரு.கதை சொல்லி………
    எந்த இடத்திலும் தொய்வின்றி படிக்க முடிந்தது…..
    ////என் கண்களை பிரிப்பதற்கு வெகு நேரம் எடுத்துக்கொண்டது மூளை////….நல்ல நடை….

    Like

    1. //கொஞ்சம் இடம் , வரி விட்டு எழுதுங்க வாசிப்பதற்கு ரெம்ப கஷ்டமாயிருக்கு//
      மாற்ற முயற்சி செய்கிறேன்

      //கதை நன்றாக இருக்கின்றது//
      நன்றிங்க குந்தவை

      Like

  8. உங்கள் தொண்டை குழி ஏன் அடைத்தது ? அவள் விபச்சாரி என்பதாலா …? அவள் விபச்சாரி என்று முன்பே தெரியாமல் போய்விட்டதே என்பதாலா…?இன்னும் நன்றாக, சுருக்கமாக .. எழுதுங்கள்…உங்களால் முடியும்

    Like

    1. //உங்கள் தொண்டை குழி ஏன் அடைத்தது ? அவள் விபச்சாரி என்பதாலா …? அவள் விபச்சாரி என்று முன்பே தெரியாமல் போய்விட்டதே என்பதாலா…?//
      தொண்டை குழி அடைத்ததுக்கு காரணம் ஒப்புமை படுத்தலின் வேறுபாடு தான். நீங்க கேட்ட முதல் கேள்விக்கு பதில் ஆம் என கொள்க.
      //இன்னும் நன்றாக, சுருக்கமாக .. எழுதுங்கள்…உங்களால் முடியும்//
      நன்றிங்க குட்டிசாமி. ஆக்கத்துக்கும் ஊக்கத்துக்கும்

      Like

  9. முதல் கதையா அடலேறு? அப்படி தெரியாத அளவுக்கு இருக்கு இந்த கதையோட நடை. எங்கு பார்த்தோம் என்ற அவனுடைய கேள்விக்கான அந்த டைரியின் பதில் ஓங்கி அறைந்த மாதிரி இருந்தது. வாழ்த்துக்கள்..

    Like

    1. //எங்கு பார்த்தோம் என்ற அவனுடைய கேள்விக்கான அந்த டைரியின் பதில் ஓங்கி அறைந்த மாதிரி இருந்தது//
      உள்வாங்களில் ஏதோ குறைவதாகவோ, தவறுவதாகவோ நான் நினைக்கிறேன். கொஞ்சம் விரிவா சொல்ல முடியுமாங்க கபில்லசிவா.

      //முதல் கதையா அடலேறு? அப்படி தெரியாத அளவுக்கு இருக்கு இந்த கதையோட நடை//

      ஆமாங்க முதல் கதை தான். நன்றி

      Like

  10. நல்ல கதை நண்பா.. பட்டி பாத்து டிங்கரிங் செஞ்சிருக்கலாம்.. ஒன்னு நீளம் கம்மியா இருந்திருக்கணும் இல்ல கதாநாயகி கேரக்டர்க்கு ஏத்த “நீலம்” இருந்திருக்கணும் 🙂

    Like

    1. //பட்டி பாத்து டிங்கரிங் செஞ்சிருக்கலாம்.. ஒன்னு நீளம் கம்மியா இருந்திருக்கணும் இல்ல கதாநாயகி கேரக்டர்க்கு ஏத்த “நீலம்” இருந்திருக்கணும் :)//
      இதுக்கு என்ன சொல்லட்டும் பட்டி பாத்து டிங்கரிங் செஞ்சது தான் இது 😉
      கதையின் ஓட்டத்துலயே போனதால நீளம் , நீலம் இரண்டுமே கவனிக்கப்படல தான்., அது தான் இந்த கதைக்கு தேவைனு நானும் நினைச்ச.

      Like

  11. //ஆண்மை என நான் புரியும் கணத்தில் ஒரு பார்வை பாத்தபடியே கேட்டாள்” நீங்க தான சத்யா”? தூக்கிவாறி போட்டது எனக்கு, நான் தழுதழுத்த குரலில் ஆமா!!//

    இந்த இடத்துலையே நான் கதையோட முடிவ கண்டுபிடிச்சுட்டேன்.. நீ அந்த மாதிரி எடத்துக்கு தான் போவ.. அந்த மாதிரி பொண்ணுங்களுக்கு தான் உன்ன தெரியும்!!

    கதை சொல்லும் சேதி/ நீதி:
    1) அந்த மாதிரி இடத்துக்கு போனா உண்மையான பேர சொல்லாதீங்க
    2) அந்த பொண்ணுங்க முகத்தையும் கொஞ்சம் பாருங்க!!

    எக்ஸ்ட்ரா பிட்டு:
    மச்சி உன் சொந்த கதைய நீ இப்படி எழுதின விஷயத்த நான் யாருக்கும் சொல்லல ! 🙂 🙂

    Like

    1. //இந்த இடத்துலையே நான் கதையோட முடிவ கண்டுபிடிச்சுட்டேன்.. நீ அந்த மாதிரி எடத்துக்கு தான் போவ.. அந்த மாதிரி பொண்ணுங்களுக்கு தான் உன்ன தெரியும்!//
      வாங்க சுட்ட பழம்., ஒருவரை எப்படி வம்பில் மாட்டி விடுவது என்பது என்பது என் நண்பனுக்கு கைவந்த கலை.
      அபரஞ்சிதாக்கு தெரிஞ்சது எப்படினு அடுத்த வரி-ல சொல்லீருப்பனே. 🙂

      //1) அந்த மாதிரி இடத்துக்கு போனா உண்மையான பேர சொல்லாதீங்க
      2) அந்த பொண்ணுங்க முகத்தையும் கொஞ்சம் பாருங்க!!//

      அனுபவம் பேசுகிறதா நண்பரே!!!

      //மச்சி உன் சொந்த கதைய நீ இப்படி எழுதின விஷயத்த நான் யாருக்கும் சொல்லல ! 🙂 🙂 //
      சொந்த கதைனு நம்ப வெச்சதுதான் என்னோட வெற்றி.. 😉

      Like

  12. இது ‘காதல் கதை’ அல்ல என்று நானும் ஒப்புக் கொள்கிறேன்.

    நாயகன் அந்தஸ்த்திலே வந்து கொண்டிருந்த கதை சொல்லியான சத்யா.. இறுதியில் அந்த அந்தஸ்த்தினை இழந்து விடுகிறார்.

    “இது ஒரு விபச்சாரியின் டயரி குறிப்புகள்” என்று பார்த்தவுடன்.. அவன் சந்தோஷப்பட்டே இருக்கனும். ‘ரூட் க்ளியர்’ என்று மகிழ்ந்திருந்தால் அது காதல். இவனை பிடித்திருப்பதால் தான் டைரி அளித்தாள். நாசுக்காக உண்மையையும் வெளிப்படுத்தினாள். ஆக காதலுக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. இடைஞ்சல் அவனது கன்னித்தனமான எதிர்பார்ப்பு தாண்.

    // நானும் அபரஞ்சிதா மட்டுமே உணரக்கூடிய பூக்களில் இருக்கும் நிசப்தம் அங்கு நிறைவேறிக்கொண்டிருந்தது.. //

    இது அவனை அவனே ஏமாற்றிக் கொண்ட மாய கற்பிதங்கள். அவள் அழகை மட்டுமே ரசித்து உள்ளான் சத்யா.

    தே.பா.நா (தேவதையை பார்த்த நாள்) என்று தனது டைரியில் எழுதியவன்.. அவளது டைரியை படித்தவுடன் தே.பா.நா* விற்கு வேறு அர்த்தம் கொடுத்து விட்டான்.

    அவளது இலக்கிய ஞானத்திற்கு அவனுள் ஒரு ரசிகன் இருப்பதாக அவன் சொல்லிக் கொண்டது… அவள் அழகை ரசிக்க ஒரு டீசன்ட்டான சமாதானம். இன்னும் வெளி அழகை வைத்தே தேவதைகள் அந்தஸ்து தரப் படுவது கொடுமை. அதுவும் பலர் பிடித்து விளையாடிய பட்டாம்பூச்சியை, மனதை குத்தும் வெறும் பூச்சியாக தான் பார்ப்பார்கள் போல :(. இன்னொருவர் பிடித்தற்காக அது பட்டாம்பூச்சியே இல்லையென்று ஆகி விடுமா என்ன? மலர்கள் இந்த விஷயத்தில் பாகுபாடு பார்ப்பதில்லை.

    😀 நல்ல கதை.

    ஒருவேளை சத்யாவை சோதிப்பதற்காக.. அபரஞ்சிதா போலி டைரி கூட கொடுத்திருக்கலாமில்ல!! 🙂

    Like

    1. //நாயகன் அந்தஸ்த்திலே வந்து கொண்டிருந்த கதை சொல்லியான சத்யா.. இறுதியில் அந்த அந்தஸ்த்தினை இழந்து விடுகிறார்//
      எனக்கு அப்படி தெரியவில்லை. எதனால் என்று கூற முடியுமா?

      //“இது ஒரு விபச்சாரியின் டயரி குறிப்புகள்” என்று பார்த்தவுடன்.. அவன் சந்தோஷப்பட்டே இருக்கனும். ‘ரூட் க்ளியர்’ என்று மகிழ்ந்திருந்தால் அது காதல்.,,இடைஞ்சல் அவனது கன்னித்தனமான எதிர்பார்ப்பு தாண்//
      சத்யா பயணம் முடியும் வரை அவளை காதலிக்கவே இல்லை..,காதலிக்கும் எண்ணமும் இல்லை., இவ்வளவு அழகான பெண் ,தன்னை மிகவும் கவர்ந்த பெண் ஒரு உடல் விற்பவளாக இருந்தததின் ஏமாற்றம் தானே தவிர அவனது கன்னித்தனமான எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை.

      //இது அவனை அவனே ஏமாற்றிக் கொண்ட மாய கற்பிதங்கள். அவள் அழகை மட்டுமே ரசித்து உள்ளான் சத்யா.//
      ரயில் பயணத்தில் அழகை தவிர வேறு எதுமே பேசவில்லையா..அப்படி அழகை ரசிப்பது அவ்வளவு பெரிய குற்றமா என்ன? ரயில் பயணத்திலேயே அனைத்து விடயங்களையும் பறிமாறிக்கொள்ள முடியுமா என்ன,,??

      //தே.பா.நா (தேவதையை பார்த்த நாள்) என்று தனது டைரியில் எழுதியவன்.. அவளது டைரியை படித்தவுடன் தே.பா.நா* விற்கு வேறு அர்த்தம் கொடுத்து விட்டான்.// அது நீங்கள் எடுத்துக்கொண்ட முடிவுங்க சாம்ராஜ்ய ப்ரியன்.

      //இன்னும் வெளி அழகை வைத்தே தேவதைகள் அந்தஸ்து தரப் படுவது கொடுமை. அதுவும் பலர் பிடித்து விளையாடிய பட்டாம்பூச்சியை, மனதை குத்தும் வெறும் பூச்சியாக தான் பார்ப்பார்கள் போல 😦 . இன்னொருவர் பிடித்தற்காக அது பட்டாம்பூச்சியே இல்லையென்று ஆகி விடுமா என்ன? மலர்கள் இந்த விஷயத்தில் பாகுபாடு பார்ப்பதில்லை.//
      நல்ல வார்த்தை சேர்ப்பு.ஆனால் பாருங்க முதல் முறை பார்க்கும் போது யாருக்கு தெரியும் ஒருவர் (ஒருத்தி) எப்படி என்று. அழகை வைத்து தான் தேவதைகள் அந்தஸ்து தரபடுகிறது.ஆனால் அப்படி கொடுக்கப்படும் தேவதை அந்தஸ்து நீண்ட நாட்கள் நிலைப்பதில்லை.

      //:D நல்ல கதை.//
      நன்றிங்க நண்பரே

      //ஒருவேளை சத்யாவை சோதிப்பதற்காக.. அபரஞ்சிதா போலி டைரி கூட கொடுத்திருக்கலாமில்ல!! 🙂 //
      நல்ல சிந்தனை, ஆனால் கொடுத்தது உண்மையான டைரி.. 😉

      நல்ல விமர்சனம்., பின்னூட்டத்திற்க்கு நன்றிங்க நண்பரே

      Like

  13. //தன் தலைமுடியை வாரி சுருட்டி குடுமி இட்டாள், குடுமியில் இருந்து பிரிந்துவந்த முடிகள் நான் இன்னும் கொஞ்ச நேரம் உன் முகத்தோடு உறவாடி கொண்டிருக்கிறேன் என்றவாக முகத்தின் மேல் படர்ந்து விரிந்திருந்தது.அடிக்கடி அந்த முடிகளை தன் விரல்களால் இழுத்துச்சென்று தன் காது இடுக்கில் விட்டுக்கொண்டிருந்தாள்.காது இடுக்கில் வழிந்த முடி காது மடல் வழியே கீழிறங்கி என்னை பார்த்துக்கொண்டிருந்தது//

    படித்தேன் ரசித்தேன். வெற்றி பெற வழ்த்துக்கள்.

    Like

  14. கதை நல்லாருக்கு!

    நானாக இருந்திருந்தால் அடுத்த நிமிடமே போன் பண்ணியிருப்பேன்!

    யாராக இருந்தாலும் அப்படிதான்னு நினைக்கிறேன்!
    ரூமுக்கு போன செந்தில் விட மாட்டானே!

    Like

  15. வலைப்பூ உலகிற்கு புதியவன் நான். அடலேறு என்ற வீரம் விளைந்த பெயரில் இத்தனை மென்மையான காதல் கதையா? கலக்கிட்டீங்க. இந்த மாதிரி ஒரு திரைக்கதையை சத்யராஜ் & ஒரு புதுமுக ஹீரோ நடித்த படத்தில் பார்த்த ஞாபகம். அதில் அபரஞ்சிதா ரோலில் மதுமிதா நடித்திருந்தார். அதனாலென்ன… அது வேறு களம். இது வேறு களம். கதையின் இறுதிக்கட்டம் வரைக்கும் “ஜிவ்” என்ற உணர்வு இருந்ததை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். தொடர்ந்து “ரொமான்டிக்” கதைகளை எழுதுங்கள்.
    ஆவலுடன், அ. சரவணன்.

    Like

  16. எனக்கு மிகப் பிடித்த கதை அடலேறு…
    நீளம் கூட ரசிக்கும் படி இருந்தது ரயில் பயணம் போல…
    நச் முடிவுதானெனினும், கதைக்கு மிகப் பொருந்துகிறது..
    முதல் கதை என நம்ப முடியவில்லை…
    இன்னும் எழுதுங்கள்… படிக்க ஆர்வம்….

    ரசனையான ஆசாமி நீங்கள்…

    எனது கதை பற்றி உங்கள் பார்வை வேண்டும்.
    http://thamizhparavai.blogspot.com/2009/11/blog-post_15.html
    (பதிலுக்குப் பதில் அல்ல… ரசனை பிடித்ததால் கேட்கிறேன்)

    Like

பின்னூட்டமொன்றை இடுக

Create a free website or blog at WordPress.com.

Up ↑